‘அரைசதம் சரி… ஆனால் கோலி திருப்தியில்லை’ – ஹர்பஜன் சிங் கருத்து

ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி திருப்தியில்லை என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Published on: 14 Apr 2026, 08:14 am
15

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
‘அரைசதம் சரி… ஆனால் கோலி திருப்தியில்லை’ – ஹர்பஜன் சிங் கருத்து

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கோலி றித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 240/4 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் கோலி அரைசதம் அடித்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், கோலி தனது இன்னிங்ஸில் முழுமையாக திருப்தியடையவில்லை போலத் தெரிகிறது என்று கூறினார். அதற்கு முக்கிய காரணமாக Phil Salt அதிரடியான ஆட்டம் அமைந்தது என்றும் அவர் விளக்கினார். 

சால்ட் வேகமாக ரன்கள் சேர்த்ததால், கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக தோன்றியது. ஆனால் அதே நேரத்தில், அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தமின்றி விளையாட உதவியதாகவும் தெரிவித்தார்.

மேலும், பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்ட போது கோலி மிகவும் கவனமாக விளையாடியதாகவும், மற்ற பந்துவீச்சாளர்களை இலக்காக கொண்டு ரன்கள் சேர்த்ததாகவும் கூறினார்.

அதேபோல், Krunal Pandya பந்துவீச்சு இந்தப் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW