IPL வரலாற்றில் மோசமான ஓவர் – லக்னோ பந்துவீச்சை சிதைத்த பஞ்சாப்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் எய்டன் மார்க்ரம் வீசிய ஓவரில் 32 ரன்கள் குவிக்கப்பட்டது. இது IPL வரலாற்றில் மோசமான ஓவர்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

Published on: 20 Apr 2026, 06:17 pm
32

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
IPL வரலாற்றில் மோசமான ஓவர் – லக்னோ பந்துவீச்சை சிதைத்த பஞ்சாப்

ஐ.பி.எல் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கடுமையான தோல்வியை சந்தித்ததுடன், மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது.

போட்டியின் தொடக்கத்தில் Mohammed Shami சிறப்பாக பந்து வீசி, Prabhsimran Singh-ஐ டக் அவுட் செய்து லக்னோ அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் போட்டியின் நிலைமையே மாறிவிட்டது.

Priyansh Arya மற்றும் Cooper Connolly இணை லக்னோ பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கினர். குறிப்பாக 13வது ஓவரில் Aiden Markram வீசிய ஓவர் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் கானோலி தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்தார். அதன் பின் ஒரு வைடு, ஒரு ரன், பின்னர் Priyansh Arya தொடர்ந்து 2 சிக்ஸர்கள் அடித்தார். இதனால் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு லக்னோ அணியின் தரப்பில் Ravi Bishnoi (27 ரன்கள்) மற்றும் Avesh Khan (26 ரன்கள்) அளித்திருந்த ஓவர்கள் மோசமானதாக இருந்த நிலையில், தற்போது மார்க்ரம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த ஆட்டம், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்டிங்கையும், லக்னோ அணியின் பந்துவீச்சு சவால்களையும் வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW