காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகலா? சென்னை அணிக்கு அதிர்ச்சி

சென்னை அணிக்கு அதிர்ச்சியாக, இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: 19 Apr 2026, 07:56 pm
20

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகலா? சென்னை அணிக்கு அதிர்ச்சி

சென்னை அணிக்கு அதிர்ச்சியாக, இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த மாத்ரே அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஓடுவதில் சிரமம் ஏற்பட்ட அவர், சில பந்துகளுக்குப் பிறகு அவுட்டானார்.

காயம் தீவிரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் சென்னை அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவு என பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதுகுறித்து அணியிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW