இஷான் கிஷன் அதிரடி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2026 இல் இஷான் கிஷன் 91 ரன்கள் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முழு போட்டி விவரம்.

Published on: 14 Apr 2026, 08:07 am
14

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
இஷான் கிஷன் அதிரடி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2026 தொடரின் 21வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அணியின் கேப்டன் Ishan Kishan அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார்.

அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் இடம்பெற்றன. அவருக்கு துணையாக Heinrich Klaasen 26 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 216/6 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது.

217 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. Yashasvi Jaiswal வெறும் 1 ரன்னில் அவுட் ஆனார். மேலும் வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தொடர்ந்து துருவ் ஜுரெல் மற்றும் ப்ரெடோரியஸ் ஆகியோரும் டக் அவுட் ஆகி ஏமாற்றினர். பின்னர் Ravindra Jadeja மற்றும் பெரரியா இணைந்து அணியை மீட்டெடுக்க முயன்றனர். ஜடேஜா 45 ரன்களும், பெரரியா 69 ரன்களும் எடுத்தாலும், அது வெற்றிக்கு போதவில்லை.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ப்ரஃபுல் ஹிஞ்ச் மற்றும் ஷகிப் ஹொசைன் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்; Ishan Malinga 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW