காயம் காரணமாக அடுத்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா?

ஐபிஎல் 2026 இல் ஹாம்ஸ்ட்ரிங் காயம் அடைந்த ரோகித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மருத்துவ பரிசோதனைக்கு பின் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Published on: 14 Apr 2026, 08:04 am
18

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
காயம் காரணமாக அடுத்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ந்து சவால்கள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி, இந்த சீசனில் 4 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் தொடக்க வீரர் Rohit Sharma சிறிய அதிரடியை காட்டி 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ஆனால், ஆட்டத்தின் போது ஹாம்ஸ்ட்ரிங் பகுதியில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, அவர் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறினார். இது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மாவின் காயம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கேன் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவின் அடிப்படையில், அவர் அடுத்த போட்டிகளில் களமிறங்குவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக ஏப்ரல் 16ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்த முக்கியமான போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW