கொல்கத்தாவுக்கு எதிராக தோனி களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

காயத்திலிருந்து மீண்ட எம்.எஸ். தோனி, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்களில் அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு மற்றும் அணியின் நிலைமை பற்றி முழு விவரம்.

Published on: 14 Apr 2026, 08:10 am
17

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
கொல்கத்தாவுக்கு எதிராக தோனி களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவம் மிக்க வீரர் தோனி இன்னும் ஒரு போட்டியிலும் களமிறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. காயம் காரணமாக அவர் இதுவரை அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

தோனியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என நம்பினர். ஆனால் அந்த ஆட்டத்திலும் அவர் இடம்பெறாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெறும் முக்கியமான போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் அதிகரித்துள்ளது.

தொடர் தோல்விகளால் சிக்கலில் இருந்த சென்னை அணி, சமீபத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், தோனியின் சேர்க்கை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் கடைசி இடங்களில் இருப்பதால், இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW