தம்பி ஹர்திக் விக்கெட்டை அசிங்கப்படுத்திய அண்ணன் க்ருனால்! வைரலாகும் வீடியோ - மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!

மும்பை vs பெங்களூரு மோதிய விறுவிறுப்பான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டான போது, அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா கிண்டலாகக் கொண்டாடியது வைரலாகி வருகிறது.

Published on: 13 Apr 2026, 12:26 pm
44

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
தம்பி ஹர்திக் விக்கெட்டை அசிங்கப்படுத்திய அண்ணன் க்ருனால்! வைரலாகும் வீடியோ - மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!
Hardik and Krunal Pandya IPL 2026

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இதில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், களத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 40 ரன்கள் எடுத்து வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றார். ஆனால், ஜேக்கப் டஃபி வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது எதிர் அணியில் இருந்த அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா, தெருவோர கிரிக்கெட்டில் விளையாடுவது போல ஹர்திக்கை வம்பிழுத்து கொண்டாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தத் தோல்வியின் மூலம் மும்பை அணி தனது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தோல்வி குறித்துப் பேசிய ஹர்திக், "எங்கள் திட்டங்கள் பலனளிக்கவில்லை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தீவிர மாற்றங்களைச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக, இதுவரை ஒரு ஆட்டத்திலும் தோற்காத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியை வியாழக்கிழமை மும்பை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்று மும்பை மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW